இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி! Stock Market Crash
இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி! Stock Market Crash
இந்திய பங்குச்சந்தைகளில் கடுமையான வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ₹15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று, சென்செக்ஸ் 2,352 புள்ளிகள் வீழ்ந்து 78,629 புள்ளிகளில், நிஃப்டி 721 புள்ளிகள் சரிந்து 23,989 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. உலகளவிலான பங்குச்சந்தை வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்க மந்தநிலை மற்றும் மத்திய கிழக்கு பதட்டங்கள் காரணமாக, ஜப்பான் மத்திய வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தியது. இதனால், பங்குச்சந்தை 20% வீழ்ச்சி அடைந்தது. ஒரு மணி நேரத்தில் ₹15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த சில மாதங்கள் பங்குச்சந்தை சவாலானதாக இருக்கும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள், முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.