ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை!

Sep 14, 2024 - 12:16
 6
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை!

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்!

ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு துவங்கியது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 70 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை பெறலாம் எனவும் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 4.5 கோடி குடும்பங்கள் மற்றும் சுமார் 6 கோடி தனிநபர்கள் பயனடைவார்கள். தகுதிபெறும் மூத்த குடிமக்களுக்கு AB PM-JAY இன் கீழ் புதிய, தனித்துவமான அட்டை வழங்கப்படும்.

மத்திய அமைச்சரவை கூட்டம்!

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் ,உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது!

  • ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 70 வயது கடந்த 6 கோடி மூத்த குடிமக்கள் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மருத்து காப்பீடு வழங்கப்படும்
  • பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் கிராமங்களுக்கு 62,500 கி.மீ. தூர சாலைகள்
  • பி.எம். ‛‛இ'' டிரைவ் திட்டத்திற்கு 10ஆயிரத்து 900 கோடி ஒதுக்கீடு
  • மின்சார ஆம்புலன்ஸ்களுக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு
  • நீர்மின் திட்டங்களுக்கு 12,461 கோடி நிதி ஒதுக்கீடு. இவ்வாறு அவர் கூறினார்