மோடி எனக்கு நண்பர் தான் ஆனால்… அப்படி நடத்தவில்லை!
அமெரிக்காவுக்கு தான் முன்னுரிமை

மோடி எனக்கு நண்பர் தான் ஆனால்… அப்படி நடத்தவில்லை!
இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையாக இந்தியாவுக்கு 26% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்பை தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வர்த்தக ரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்,
அனைத்து வெளிநாட்டு பொருட்களுக்கும் குறைந்தபட்ச இறக்குமதி வரியாக 10% நிர்ணயிக்கப்படுவதாகவும் தங்களிடம் 52% இறக்குமதி வரி விதிக்கும் இந்தியாவிடம் பரஸ்பர வரியாக 26% வரி விதிக்கப்பட்டுள்ளது.
10% வரி விதிக்கும் நடவடிக்கை வரும் 5ம் தேதி அமலுக்கு வரும். பிற நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 9ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், ட்ர்ம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக மோசமாக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு வந்தார். மோடி என்னுடைய மிகச் சிறந்த நண்பர், என்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் எங்களை நன்றாக நடத்தவில்லை.
அமெரிக்காவிடம் 52 சதவீதம் இறக்குமதி வரி வசூலிக்கிறது இந்தியா.
பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் என அதிபர் ட்ரம்ப் உறுதி தெரிவித்துள்ளார்.
வரிவிதிப்பின்படி, இந்தியா 26%, சீனா 34%, தென் கொரியா 25%, ஜப்பான் 24%, தைவான் 32%, சுவிட்சர்லாந்து 34%, இங்கிலாந்து 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ட்ரம்ப் விதித்துள்ள வரியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.