9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம்… மத்திய அமலாக்க அமைச்சகம் பெருமிதம்!
தமிழ்நாடு 2024 – 25ம் ஆண்டில் முதலிடத்தில் உள்ளது

9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம்… மத்திய அமலாக்க அமைச்சகம் பெருமிதம்!
9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை எட்டியுள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறோம்.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்.
இந்த புதிய உச்சம் மாநிலத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்த வளர்ச்சியாகும்.
2023 – 24ம் நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.15,71,368 கோடியாக இருந்தது, இது 2024 – 25ல் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் முன்கூட்டிய மதிப்பீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு 2024 – 25ம் ஆண்டில் முதலிடத்தில் உள்ளது.