காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே….

வெளிநாடுகளில் தான் அதிகமாக கொண்டாடுகிறார்கள்

Feb 13, 2025 - 14:53
 8
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே….

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே….

பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  

பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தை வெளிநாடுகளில் தான் அதிகமாக கொண்டாடுகிறார்கள்.

ஆசியா கண்டத்திலேயே அதிக மலர்கள் உற்பத்தி செய்கின்ற மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. அதில் தேன்கனிக்கோட்டை. தலி. ஓசூர். ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பல்வேறு ரகங்கள் கொண்ட ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தற்பொழுது காதலர் தினம் நெருங்கி உள்ளதால். ஓசூர் பகுதியில் இருந்து தாஜ்மஹால் கோஹினூர் மற்றும் பல்வேறு வண்ணங்களில் லட்சக்கணக்கான ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு. சிங்கப்பூர். மலேசியா. ஆஸ்திரேலியா. அரபு நாடுகள். ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா. போன்ற நாடுகளுக்கு. இங்கிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு புயல் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் சற்று குறைவாக இருந்தது. ஆனால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். அதனால் மலர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஒரு ரோஜாவின் விலை 15 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. அதனால் ரோஜா விவசாயிகள் சிறிது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.