நாடு முழுவதும் அலர்ட்…. ஒத்திகையில் இறங்கிய மாநிலங்கள்!

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்டியல்

May 6, 2025 - 16:25
 22
நாடு முழுவதும் அலர்ட்…. ஒத்திகையில் இறங்கிய மாநிலங்கள்!

நாடு முழுவதும் அலர்ட்…. ஒத்திகையில் இறங்கிய மாநிலங்கள்!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நாளை (07.05.2025) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

 உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான முன்னோட்டத்தில் ஈடுபட்ட காவல்துறை

 பொதுமக்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஆபத்து காலங்களில் எப்படி அவர்களை காத்துக் கொள்வது என்று வழிகாட்டுவது தான் ஒத்திகையின் முக்கிய நோக்கம்

 சைரன் ஒளித்தால் என்ன செய்ய வேண்டும்? தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் விளக்கப்படுகின்றன

 மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையில் உத்தரவு 

பாதுகாப்பு ஒத்திகையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என காவல்துறையினருக்கு பயிற்சி 

தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்பாக்கம் அனுமின் நிலையம், சென்னை விமான படை தளம், ஆவடி விமான படை தளம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு குறித்து ஒத்திகை  

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்டியல் கொடுக்கப்பட்டிருகிறது 

ராணுவ நடவடிக்கைகளை இருநாடுகள் கைவிட வேண்டும் என ஐநா வலியுறுத்திய நிலையில் பாகிஸ்தான் வரவேற்பு

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐநா கூறியதை வரவேற்கிறோம் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம்