தருமபுரி மாவட்டத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 2 நபர்கள் கைது

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்டம் கும்பார அள்ளி சோதனை சாவடியில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்தி வந்த 2 நபர்கள் கைது

Sep 13, 2024 - 19:39
 17
தருமபுரி மாவட்டத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 2 நபர்கள் கைது

 தருமபுரி மாவட்டத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்டம் கும்பார அள்ளி சோதனை சாவடியில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 
 பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு மனோகரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில்  காரிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு பார்த்தீபன் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் கும்பார அள்ளி சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 5 லட்சம் மதிப்புள்ள 1 டன் குட்கா இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த 2 பேரையும் பிடித்து போலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜீதிஷ்(45) மற்றும் சுருபின் (29) என்பதும் இவர்கள் கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு குட்கா கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 கார்கள் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.