விசாரணைக்கு பச்சைக் கொடி காட்டிய பாகிஸ்தான்.... எதற்கும் தயாராக இருப்பதாக உறுதி!
நடுநிலை விசாரணைக்கு தயார்

விசாரணைக்கு பச்சைக் கொடி காட்டிய பாகிஸ்தான்..... எதற்கும் தயாராக இருப்பதாக உறுதி!
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலை விசாரணைக்கு தயார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது.
பஹல்காம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் தலையீடு இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சிந்துநதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை இந்தியா முன்னெடுத்திருக்கக்கூடிய நிலையில் பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர்,
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது.
நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாகிஸ்தான் படைகள் முழு திறனுடனும் தயாராகவும் உள்ளன.
இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால் அதை இந்த உலகத்திற்கு இந்தியா கொண்டு வர வேண்டும் எனவும், இது ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.