அவள் ஆட்சியே இங்கு அரசாட்சி…. சித்திரை திருவிழா சொல்லும் வரலாறு!
"மதுரம் என்ற பெயர்"
அவள் ஆட்சியே இங்கு அரசாட்சி…. சித்திரை திருவிழா சொல்லும் வரலாறு!
18ம் படி கருப்பசாமி காவல் தெய்வமானது ஏன்?
பெண்ணுக்கே முதல் மரியாதை?
தென் தமிழ்நாட்டின் சித்திரை திருவிழா என்றாலே ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு, அண்ணன் கள்ளழகருக்கும், தங்கை மீனாட்சிக்கும் பூலோகமே ஒன்று கூடி நடத்தும் பெரும் திருவிழா தான்.
எந்த ஊரிலும் பெண்ணுக்கு முடி சூடி திக் விஜயம் செய்யும் வழக்கமே கிடையாது. ஆனால், மதுரையில் மட்டும் பெண்ணுக்கே முதல் மரியாதை அவளாட்சியே அங்கு அரசாட்சி என்னும் வரலாற்று சிறப்பு மிக்கவள் மதுரை மீனாட்சி.
மதுராநகரம், கூடல்நகரம், மல்லிகை மாநகர், மல்லிநகரம், பாண்டிய மாநகரம், வைகை நகரம், நான்மாடக்கூடல், திரு ஆழவாய், சுந்தரேசபுரி, மீனாட்சி நகரம், தூங்கா நகரம் என இப்படி பல சிறப்புகளை கொண்ட ஒரே ஊர் அது மதுரை மாநகரம் தான்.
இப்படி மதுரையை பற்றிய வரலாற்று சிறப்புகளை அடிக்கிக் கொண்டே போகலாம்.
சரி, மதுரையின் பெயர் காரணம் குறித்தும், ஒரே நேரத்தில் சைவ, வைணவ தெய்வங்களை ஒரே நேரத்தில் கொண்டாடும் காரணம்,
அழகர் கோவிலில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வரும் அழகர் தன் தங்கை மீனாட்சி கோவிலுக்கு மட்டும் செல்லாதது ஏன்? தள்ளாக்குலம் வரை வந்து ஆற்றைக்கடந்து மதுரைக்குள் நுழையாமல் திரும்புவது ஏன்? அழகர் துளுக்க நாச்சியார் வீட்டிற்கு மட்டும் செல்வது ஏன் என மதுரை சித்திரை திருவிழாவில் ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்படுடிகின்றன.
மதுரை சித்திர திருவிழாவின் இத்தனை கேள்விகளையும் அதன் விளக்கங்களையும் இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
பல வரலாற்றுகளையும் கூறும் காவிய மாந்தர்களும் மதுரையை ஒரு கடம்பவன பகுதி என்றே கூறுகின்றனர்.
அதற்கு ஒரு கதையும் உள்ளது. முன்பொரு காலத்தில் தனஞ்செயன் என்ற ஒரு வணிகன் இந்த காட்டுப்பகுதியை இரவு நேரத்தில் கடந்து சென்ற போது, அங்குள்ள ஒரு கடம்ப வனத்தின் கீழ் உள்ள ஒரு சுயம்பு லிங்கத்தை விண்ணக தலைவனான தேவேந்திரன் தன்னுடைய தேவர் படையுடன் இணைந்து வழிபட்டு மீண்டும் வாணுலகு செல்வதை பார்த்து அதிசயத்து போன தேவேந்திரன்
இந்த செய்தியை குலசேகர பாண்டிய அரசனிடம் கூறியிருக்கிறார். குலசேகரன் உடனடியாக தன்னுடைய பரிவாரங்களை அனுப்பி சுயம்பு லிங்கத்தை மையமாக வைத்து கற்கோவில் கட்டுகிறார்.அப்போது சிவபெருமான் தோன்றி தன்னுடய ஜடா முடி கற்றையிலிருந்து அமுதத்துளியை சிந்தி அருளவே அந்த பகுதிக்கு மதுரம் என்ற பெயர் வந்துள்ளது.
இதுவே காலப்போக்கில் மருவி மதுரை என்றானது.
இந்த மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு திருவிழாக்களின் திருவிழா என்ற மங்காத ஒரு புகழ்மொழியும் உண்டு.
மீனாட்சி கோவில் கொடியேற்றத்தில் துவங்கி அழகர் மீண்டும் மலைக்கு திரும்பும் இந்த சித்திரை திருவிழா மொத்தம் 16 நாட்கள் நடைபெறும்.
வைகை ஆற்றின் தென்கரை முழுவதும் சைவம், வைகை ஆற்றின் வடகரையில் வைணவ நிகழ்வுகளும் நடைபெறும்.
ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இந்த விழா சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்களின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது.
மீனாட்சியின் திருக்கல்யாணத்தை மதுரை மக்கள் தங்கள் வீட்டு நிகழ்வாக கருதி கொண்டாடி வருகின்றனர்.
சைவ தெய்வமான மீனாட்சி கல்யாணத்திற்கும், வைணவ தெய்வமான அழகர் ஊர்வலத்திற்கு என்ன தொடர்பு என்றால், மாசி மாதத்தில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதத்திற்கு மாறி இருக்கிறது.
அலங்காநல்லூர் தேனூரில் நடந்த இந்த விழா மதுரைக்கு மாறியிருக்கிறது.
மாசியில் அறுவடை காலத்தில் நடத்தப்பட்ட திருவிழாவில் மக்கள் கலந்து கொள்ளாமல் போனதாலும், தன்னால் திருவிழாவையும் மாற்றி அமைக்க முடியும் என்ற அதிகாரத்தை காட்டவே இந்த இரண்டையும் திருமலை நாயக்க மன்னர் இணைத்ததாக கூறப்படுகிறது.
கள்ளர் தோற்றத்தில் ஊர்வலம் வரும் அழகர் தள்ளாகுளம் பகுதிக்கு வரும் போது ஒரு முறை பாண்டி முனி மறித்துக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் 18ம் படி கருப்பசாமி அழகருக்கு உதவியதாகவும் அந்த இடத்திலேயே கருப்பசாமி கோவில் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அழகருக்கு அக்கரை என்றும், மீனாட்சிக்கு இக்கரை என்றும் வரையறுக்கப்பட்டதாலேயே மீனாட்சி ஊருக்கு அழகர் வருவதில்லையாம்.
அழகருக்கு வைகை ஆற்றின் நகர்ப்பகுதியில் ஒரேயொரு திருக்கண் உண்டு இந்த மண்டகப்படிக்கு அழகர் பள்ளக்கு வருவது கிடையாது. இதற்கு மாறாக வைகை ஆற்றின் வடகரையில் ஒரு மண்டகபடியில் அழகரின் பல்லக்கு இருக்க அழகரின் திருவடியாக கருதப்படும் ஜடாரிடை மட்டும் ஒரு சிறிய பல்லக்கில் எடுத்து வந்து பூஜை செய்து அதை மீண்டும் எடுத்து செல்கின்றனர்.
அழகர் வர முடியாத காரணத்தினால் தான் அவரது திருவடிகளை எடுத்து செல்வது அழகரின் வருகை நகருக்குள் தடுக்கப்பட்டதற்கு ஒரு சாட்சியாக கருதப்படுகிறது.
சுதபஸ் என்ற முனிவர் கங்கையில் தீர்த்தமாடி பெருமாளை நோக்கி தவமிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் துர்வாஷ மகரிஷி பரிவாரங்களோடு வந்துள்ளார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த அந்த முனிவர் ரிஷி வந்ததை கவனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த துர்வாஷர் தவளையாக போ என சாபம் விட்டுள்ளார். உடனே சாபவிமோசனம் பெற வழிகேட்ட முனிவருக்கு வைகை நதிக்கரையில் சென்று தவம் செய்து கொண்டிரு எனவும் அழகர் வந்து உனக்கு சாப விமோசனம் கொடுப்பார் எனவும் கூறியுள்ளார்.
இதுவே அழகர் ஆற்றில் இறங்கியதற்கு ஒரு காரணமாகவும் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.