திமுகவுக்கு செக் வைத்த பாஜக...திமுகவின் அடுத்த நகர்வு என்ன?

Aug 18, 2025 - 12:32
Aug 18, 2025 - 16:00
 10
திமுகவுக்கு செக் வைத்த பாஜக...திமுகவின் அடுத்த நகர்வு என்ன?

திமுகவுக்கு செக் வைத்த பாஜக!

 

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்ததன் மூலமாக திமுகவை பாஜக சிக்கலில் தள்ளி இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு பாஜக மிகமுக்கியமான வாய்ப்பை அளித்திருக்கிறது.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் 2வது முறையாக பொறுப்பில் இருக்க விரும்பிய போது காங்கிரஸ் அப்துல் கலாமிற்கு ஆதரவு அளிக்கவில்லை.

தமிழரான அப்துல் கலாமிற்கு ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கலாம் என்றாலே கலகம்தான் என்று பதிலளித்தா. 

அப்துல் கலாமை காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரைத் தான் ஆதரிப்போம் என கருணாநிதி கூறியிருந்தார் .

திமுகவின் ஆதரவு கிடைக்காததால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தே அப்துல் கலாம் விலகினார்.

அண்மையில் ராமநாதபுரம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி திமுக மீது கலாம் குறித்த விமர்சனத்தை முன்வைத்தார். 

இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழரான சிபி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது
ஒருவேளை இந்தியா கூட்டணி சார்பாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்,

தமிழருக்கு கூட திமுக ஆதரவு அளிக்கவில்லை என்ற விமர்சனத்தை பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் முன் வைக்கும் வாய்ப்பு உள்ளது.  

இதனால் அப்துல் கலாம் பாணியை போலவே மீண்டும் திமுகவுக்கு பாஜக சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

அடுத்து திமுகவின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.