ரஜினி மற்றும் கமலை இயக்கும் லோகேஷ்! Rajinikanth | Kamal Haasan | Lokesh

Rajini, Kamal - யை இயக்கும் Lokesh ????| பல கோடி பட்ஜெட்டில் உருவாகிறதா?

Aug 19, 2025 - 17:01
Aug 19, 2025 - 17:16
 10
ரஜினி மற்றும் கமலை இயக்கும் லோகேஷ்! Rajinikanth | Kamal Haasan | Lokesh

ரஜினி மற்றும் கமலை இயக்கும் லோகேஷ்! Rajinikanth | Kamal Haasan | Lokesh

தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர்களாக மட்டுமல்லாமல், நீண்டகால நண்பர்களாகவும் இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த இரண்டு ஜாம்பவான்களை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா?

மீண்டும் ஒரே படத்தில் இணையும் ரஜினி, கமல்

விக்ரம் படத்தில் கமல்ஹாசனையும், கூலி படத்தில் ரஜினியையும் வைத்து இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவர் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கியுள்ளார். இந்த கூலி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி நான்கு நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.. இந்நிலையில் லோகேஷ்  கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரஜினி மற்றும் கமலை இணைத்து ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தான் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப் போகிறதாம். எனவே லோகேஷ் கனகராஜ் கார்த்தி மற்றும் கைதி 2 படத்தின் தயாரிப்பாளர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே கைதி 2 படத்தின் வேலைகளை தள்ளி வைத்துவிட்டு இந்த புதிய படத்தை இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே ரசிகர்கள் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.