புதுக்கோட்டையில் ரவுடி துரை சுட்டுக்கொலை | Trichy Rowdy Durai Encounter

புதுக்கோட்டையில் ரவுடி துரை சுட்டுக்கொலை

Jul 12, 2024 - 21:11
Jul 12, 2024 - 22:32
 129
புதுக்கோட்டையில் ரவுடி துரை சுட்டுக்கொலை | Trichy Rowdy Durai Encounter

புதுக்கோட்டையில் ரவுடி துரை சுட்டுக்கொலை | Trichy Rowdy Durai Encounter

திருச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி இவர் மீது ஐந்து கொலை வழக்கும், 60 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 12-12-2022 ஆம் ஆண்டு இளவரசன் என்ற ரவுடியை புதுக்கோட்டை புது குளம் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் துரைசாமி முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை திருவரங்குளம் காட்டுப்பகுதியில் காவல் துறையால் திருச்சியின் பிரபல ரவுடியான துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்டார். அவருடைய உடல் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

துரைசாமியோடு உடன் வந்த பிரதீப் குமார் என்பவரையும் நேற்றிலிருந்து காணவில்லை. அவர் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் பிரதீப் குமாரின் உறவினர்கள் காவல்துறை உடனடியாக பிரதீப் குமாரை ஒப்படைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர். பின்,சற்று நேரத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில்  என்கவுண்ட்டருக்கு  கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் உடனடியாக பிரதீப் குமாரை காவல்துறையினர்  ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் துரைசாமியின் மற்றும் பிரதீப் குமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளுக்காக 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் ஒரு மணி நேரம் கால அவகாசம் கேட்டுக்கொண்டதை அடுத்து தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.