அவன் என்ன பேசுனாலும் கூட்டணிக்கே வந்துடுவான் – சீமான்
மது ஒழிப்பு மாநாட்டில் பயன் ஏதாவது இருக்கா?
அவன் என்ன பேசுனாலும் கூட்டணிக்கே வந்துடுவான் – சீமான்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. மதுக்கடையை திறந்து வைத்து நடத்தும் கட்சியோடு கூட்டணி வைக்கும் போது, விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பயன் ஏதாவது இருக்கா? என்று திருமாவளவனுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
முத்துராமலிங்கத் தேவர் அரசியலை வியாபாரமாக்கக் கூடாது. கொள்கையற்ற அரசியலை பாவம் என்றார். ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, அந்தக் காசை வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவன் தேசத்துரோகி என்று சொன்னவர்.
மதிப்புமிக்க உரிமைகளை ரொட்டித்துண்டுகளாக விற்பது அவமானகரமானது என்று அம்பேத்கர் கூறினார்.
தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பனை செய்வார்களா என்று அண்ணாதுரை சொன்னார். அவர் காலத்தில் காங்கிரஸ் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது.
கூட்டணி எனக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் கட்சிகளின் கொள்கை, ஆட்சி, ஆட்சிமுறையை பிடிக்காமல் தான், இந்தக் கட்சியை தொடங்கினேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தினர். மதுவை யார் ஒழிக்க வேண்டும்.
அரசும், அரசு சம்பந்தப்பட்டவர்கள். மதுக்கடையை திறந்து வைத்து நடத்தும் கட்சியோடு கூட்டணி வைக்கும் போது, விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பயன் ஏதாவது இருக்கா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான மது ஒழிப்பு மாநாடு பேசிவிட்டு அதே கூட்டணியில் இருக்கிறார், அதே போல் அன்புமணியும் சாதி கணக்கீடு பற்றி பேசுகிறார்.
