பிரதமர் மோடிக்கு சொடக்கு போடுற நீ, அன்னைக்கு கைக்கட்டி தான் உக்காந்திருந்த – விளாசிய நடிகர் ரஞ்சித்

அமெரிக்காவே வியந்து பார்க்கிற ஒரே பிரதமர் மோடி

Aug 30, 2025 - 15:10
 52
பிரதமர் மோடிக்கு சொடக்கு போடுற நீ, அன்னைக்கு கைக்கட்டி தான் உக்காந்திருந்த – விளாசிய நடிகர் ரஞ்சித்

பிரதமர் மோடிக்கு சொடக்கு போடுற நீ, அன்னைக்கு கைக்கட்டி தான் உக்காந்திருந்த – விளாசிய நடிகர் ரஞ்சித்

 

பிழைப்புக்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்று விஜய் யாரை சொல்கிறார் எம்.ஜி.ஆரையா?, அம்மையார் ஜெயலலிதாவையா?, கேப்டன் விஜயகாந்தை சொல்கிறாரா? என தவெக மாநாட்டில் பேசிய விஜய்க்கு நடிகர் ரஞ்சித் சரமாரியான கேள்வி எழுப்பியுள்ளார்.

நேரடியாக சொல்வதற்கு தயங்கி நடிகர் கமல்ஹாசனை விஜய் பேசியதாக தான் நான் நினைக்கிறேன் எனவும், பிழைப்பு தேடி அரசியல் செய்வதற்கு பொறுத்தமான ஆள் நடிகர் கமல்ஹாசன் தான் ஒரு வேளை விஜய் இவரை சொல்லியிருக்கலாம் என கூறியுள்ளார்.

சொடக்கு போட்டு மோடிஜி என்று பேசிய விஜய் கடந்த 2014 ஏப்ரல் 14 அன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடிசியா வளாகத்தில் கைக்கட்டி பூனைக்குட்டி போல் அமர்ந்திருந்தார்.

அன்றைக்கு விஜய் என்ன கோரிக்கை வைத்து மோடியை சந்தித்தார் கச்சத்தீவு, மீனவர் நலன், கல்வி சமத்துவம், கள்ளச்சாராயம் இதில் எதுவுமில்லாமல் எதற்கு அந்த சந்திப்பு?

இன்றைக்கு இஸ்லாமியர்கள் நலனை பாஜக கருத்தில் கொள்ளவில்லை என்று பேசும் விஜய் அன்றைக்கு அவர் படம் ரிலீசாக வேண்டும் என்று மட்டும் தான் மோடியை சந்தித்தார்.

மோடி என் தந்தை விஜய் ஒவ்வொரு சொடக்கு போடும் போதும் எனக்குள் வெறியும், வேதனையும் தான் வந்தது.

உலக நாடுகளே வியந்து பார்க்கக்கூடிய அமெரிக்க பொருளாதாரத்தையே தீர்மானிக்கிற அமெரிக்காவே வியந்து பார்க்கிற ஒரே பிரதமர் மோடி மட்டுமே.

ஒரு முதலமைச்சரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என சொல்லி சொடக்கு போடுகிறாயே உனக்கு அறிவே இல்லையா என விஜய்யை சரமாரி விமர்சித்துள்ளார்.

கட்சியின் தலைவராகிய நீயே அரசியல் நாகரீகம் இல்லாமல் நடந்துகொண்டால் உன்னை நம்பி வந்த தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்?எனவும் விஜய்க்கு சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளார்.