அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!

Sep 25, 2024 - 17:40
Sep 26, 2024 - 17:03
 11
அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆப்பிள் ஐபோன் மற்றும் கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை, ரூ.8,300 கோடியில் சென்னை ஒரகடத்தில் அமைக்க உள்ளது.

இந்தியாவில் ஆப்பில் ஐபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே பெரிய தொழிற்சாலைகளை கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் ஐபோன்களின் பெரும்பங்கினை தயாரித்து வழங்குகிறது.

இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனம் பெரும் முதலீடு செய்ய உள்ளதால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் புதிய உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும் என ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ தெரிவித்துள்ளார்.

சீனாவை விட இந்தியாவில் விநியோகச் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த ஐபோன் உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் மட்டுமே உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது