கரூர் வழக்கில் வெளியான தீர்ப்பு
தனி நீதிபதி விசாரித்தது ஏன்?

கரூர் வழக்கில் வெளியான தீர்ப்பு!
கரூர் விவகாரம் தொடர்பான மனுத்தாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை கிளையில் இரு நீதிபதிகள் விசாரிக்கும் போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி விசாரித்தது ஏன்?
சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு கண்காணிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விசாரணை அறிக்கையை மாதம் தோறும் அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு தவெக வரவேற்பு அளித்துள்ளது.
இதனையடுத்து, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதவ் அர்ஜூனா காவல்துறை கொடுத்த நேரத்திலேயே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார் விஜய் தாமதமாக வந்தார் என்பது அப்பட்டமான குற்றச்சாட்டு எனவும், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பத்தை தத்தெடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நீங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல்துறை கூறியதால் தான் கரூரில் இருந்து வெளியேறினோம் எனவும் ஆதவ் அர்ஜூனா பதில் அளித்துள்ளார்.