Pooja Hegde JOINS Dulquer Salmaan's #DQ41! துல்கர் சல்மானின் 41வது திரைப்படத்தில் பூஜா ஹெக்டே! - பான்-இந்திய திரைப்படத்திற்கு தயாராகும் DQ41
துல்கர் சல்மானின் 41வது திரைப்படத்தில் பூஜா ஹெக்டே! - பான்-இந்திய திரைப்படத்திற்கு தயாராகும் DQ41
Pooja Hegde JOINS Dulquer Salmaan's #DQ41! துல்கர் சல்மானின் 41வது திரைப்படத்தில் பூஜா ஹெக்டே! - பான்-இந்திய திரைப்படத்திற்கு தயாராகும் DQ41
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் 41வது திரைப்படமான DQ41 குறித்த மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பதை படக்குழு வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குனர் ரவி நெலக்குடிடி இயக்கும் இந்தப் படம், ஒரு அழகான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது. சுதாகர் செருகுரியின் SLV சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் பத்தாவது திரைப்படம் இது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டேவின் முதல் கூட்டணி, திரையில் ஒரு புதிய கெமிஸ்ட்ரியை உருவாக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவரின் இசை இப்படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
DQ41 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. துல்கர் சல்மானின் மார்க்கெட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இந்த பான்-இந்திய முயற்சி அமைந்துள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
