இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு நன் மதிப்பு உள்ளது - நேபாள இடைக்கால தலைவர்

கட்டியெழுப்புவதில் உறுதியோடு உள்ளேன்

Sep 11, 2025 - 15:42
 37
இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு நன் மதிப்பு உள்ளது  - நேபாள இடைக்கால தலைவர்

இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு நன் மதிப்பு உள்ளது  - நேபாள இடைக்கால தலைவர் 

ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதால் நேபாள தலைநகர் காட்மாண்டில் கடைவீதிகள் வெறிசோடி காணப்பட்டன. நேபாளத்தில் செப். 12 காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய சேவை வாகனங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டவை இயங்கலாம் என அறிவிப்பு.

அன்றாட தேவைகளுக்கான பொருட்களை மக்கள் காலை 6 மணி முதல் 9 மணிக்குள் வாங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு நன் மதிப்பு உள்ளது இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி என இடைக்கால தலைவர் சுஷிலா கார்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட இளைஞர்களை கவுரவித்து, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் உறுதியோடு உள்ளேன்.

நேபாளத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் நாட்டிற்கு ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த நாங்கள் முயற்சிப்போம்.

நேபாளத்தின் கொந்தளிப்பான அரசியல் வரலாற்றைப் பற்றி சிந்தித்து, வரவிருக்கும் சவால்களை ஏற்றுக்கொள்கிறேன்.