History of Rettamalai Srinivasan | ரெட்டமலை சீனிவாசன் வரலாறு | Rettamalai Srinivasan

History of Rettamalai Srinivasan | ரெட்டமலை சீனிவாசன் வரலாறு | Rettamalai Srinivasan
திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (சூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) ஓர் இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதிதமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.
தமிழகத்தில் மாபெரும் சமூக நீதிப் புரட்சிக்கு வித்திட்டவரும், பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காக அயராது குரல் கொடுத்தவர்.
அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, அயோத்திதாசர் எனப் பல தலைவர்களுக்கும் முன்னோடியாக விளங்கியவர். தீண்டாமை ஒழிப்பு, ஜாதிப் பாகுபாடு ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம், இட ஒதுக்கீடு, நில உரிமை என பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்தவர்.
இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916-இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917-இல் ஆதி திராவிட மகாசபை எம். சி. இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது.
1930–32களில் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார்.
அம்பேத்கர் 1935-இல் தான் மதம் மாற வேண்டும் என அறிவித்தபோது இரட்டைமலை சீனிவாசன் "நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.
சீனிவாசன், 18 செப்டம்பர் 1945 அன்று 2:45 மணியளவில் எண்.4, எம். வீரபத்திரன் தெரு, பெரியமேடு பகுதியில் தன் 87-ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.