சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்!

Aug 17, 2024 - 23:08
Sep 9, 2024 - 18:59
 7
சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் டி.ஜே ஆபிரகாம் அம்மாநில கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து ஆபிரகாம் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் சித்தராமைய மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா குற்றஞ்சாட்டி உள்ளார். பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒன்றிய அரசு இணைந்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி செய்வதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றியதை பாஜகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.