பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா…. முதல் பிரதமர் இவர் தான்…புதிய திட்டங்களும் இவருடையது தான்!
மூன்றாவது இடத்தில் மோடி

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா…. முதல் பிரதமர் இவர் தான்…புதிய திட்டங்களும் இவருடையது தான்!
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது பிறந்தநாள கொண்டாடுகிறார். அவருக்கு உலக பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் அரசியல் மூத்த தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1950ல் வாத் நகர், குஜராத்தில் பிறந்த பிரதமர் மோடி 1972ல் ஆர்.எஸ்.எஸ்ல் சேர்ந்தார்.
பின்னர்,1987 ல் பா.ஜ., வில் இணைந்து, 1995 தேசிய செயலர், 1998 பா.ஜ., பொதுச்செயலர் என அடுத்தடுத்து வளர்ந்து 4 முறை குஜராத் முதல்வராகவும், 3 முறை பிரதமராவும் மொத்தம் 24 வருடம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.
மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததே இல்லை என்பது தான் இவருடைய கடின உழைப்புக்கு ஓர் உதாரணமாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தான் முதல்முறை:
* இந்தியா சுதந்திரம் அடைந்த பின் பிறந்து, பிரதமரான முதல் தலைவர்.
* முதன்முறை எம்.பி.,யான போதே பிரதமரானவர்.
* சுதந்திர தின விழாவில் திறந்தவெளி மேடையில் உரை நிகழ்த்திய முதல் பிரதமர்.
* நீண்ட நேரம் சுதந்திர தின உரை (2025, 103 நிமிடம்) நிகழ்த்திய பிரதமர்.
* அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்ற முதல் பிரதமர். (2024 ஜன. 22)
* நீண்ட காலம் (11 ஆண்டு, 4 மாதம்) பதவி வகிக்கும் காங்., அல்லாத முதல் பிரதமர்.
இப்படி முதல் பிரதமர் என்கிற சிறப்புக்குறியவர் பிரதமர் மோடி.
மோடியின் சாதனைகள் திட்டங்கள்
* பிரதமர் மோடியின் ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு வசதி.
* ஜன்தன் யோஜனா' திட்டத்தில் 51 கோடி பேருக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது.
* ஆதார் - அலைபேசி' இணைப்பால் சமூக நலத்திட்டங்கள் விரைவாக மக்களுக்கு கிடைத்தது.
* 10 கோடி பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது.
* 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டது.
* இலவசமாக 4.2 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
* விவசாயிகளுக்கு உதவும் வகையில் 'பி.எம்.கிசான்' திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. 9.2 கோடி விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.
* 'மேக் இன் இந்தியா' திட்டத்தால் உள்நாட்டிலேயே பல்வேறு துறைகளில் உற்பத்தி தொடங்கப்பட்டது.
புதிய முயற்சி திட்டம்:
- திட்டக்குழு - நிதி ஆயோக். இதில் மாநில முதல்வர்கள் உறுப்பினராக இருப்பதால், அந்தந்த மாநிலத்துக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
- இந்தியாவின் 100 நகரங்கள் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
- நிலவில் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கியது, சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதன்முறையாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சென்றது என பல விண்வெளி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
- கொரோனா தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
'எக்ஸ்' தளத்தில் அதிகம் பேர் பின்பற்றும் உலகத் தலைவர் பட்டியலில் ஒபாமா(13.03 கோடி), டிரம்ப்க்கு (10. 92 கோடி) அடுத்து மூன்றாவது இடத்தில் மோடி (10.90 கோடி) உள்ளார்.