PG ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

PG ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கான தேர்வை ஒத்திவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியிட்டது. இதற்கான தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடத்தப்படும் என தெரிவித்தது, குரூப் 2 தேர்வு நடைபெறுவதால் அக்டோபர் 12-ம் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், முதுகலை ஆசிரியர் தேர்விற்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால், படிக்க அவகாசம் கோரி தேர்வை ஒத்திவைக்குமாறு தேர்வர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்விற்கான அறிவிப்புகள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் இணையதளத்தை தொடர்ந்து பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.