முடி உதிர்வு, பொடுகு தொல்லைக்கு ஒரே தீர்வு – ஆளி விதையை பயன்படுத்துவது எப்படி ? அதீத நன்மைகளை பற்றி பார்ப்போம்!
விரைவில் நல்ல மாற்றத்தை அடைய முடியும்

முடி உதிர்வு, பொடுகு தொல்லைக்கு ஒரே தீர்வு – ஆளி விதையை பயன்படுத்துவது எப்படி ? அதீத நன்மைகளை பற்றி பார்ப்போம்!
ஆளி விதை அதிக அளவிலான நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதை உணவாகவும் தலைமுடிக்கும் சருமத்துக்கும் என எல்லா வகைகளிலும் இந்த ஆளி விதையைப் பயன்படுத்த முடியும்.
ஆளி விதையை வறுத்து, ஜெல்லாக மாற்றி, எண்ணெய் வடிவில் என பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும்.
ஆளி விதையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மிக அதிக அளவில் இருக்கின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்,
வைட்டமின் ஈ
வைட்டமின் பி,
ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன.
முடி வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது:
முடி வளர்ச்சிக்கு ஆளி விதை மிக உதவியாக இருக்கும். இது வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தையும் போதிய நீர்ச்சத்தையும் கொடுத்து உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும். சிலருக்கு முடி நீளமாக இருக்கும். அதுபோன்று உள்ளவர்களுக்கு தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமென்றால் அதற்கு ஆளி விதையைப் பயன்படுத்தலாம்.
ஆளி விதையின் ஜெல்லை தலைமுடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்து நன்கு 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். பிறகு வழக்கம் போல மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசலாம்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை அடைய முடியும்.
பொடுகு தொல்லை இனி இல்லை:
பொடுகுத் தொல்லையைச் சரி செய்ய ஆளி விதை உதவியாக இருக்கும்.
ஆளி விதையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.
குறிப்பாக உச்சந்தலைக்குப் போதிய ஈரப்பதத்தைக் கொடுத்து பொடுகு போன்றவற்றை வராமல் தடுக்கவும் விரட்டவும் உதவி செய்யும்.
ஆளி விதையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பொடுகால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்கும் தன்மை கொண்டது.
எப்படி பயன்படுத்துவது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். அதில் ஆளி விதையைச் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். கொதிக்க கொதிக்க ஆளி விதையிலிருந்து ஜெல் வெளிவரும்.
ஜெல் நன்றாக மாறும்போது அடுப்பை அணைத்து விடுங்கள். ஜெல்லை சூடாக இருக்கும்போதே வடிகட்டியில் வடித்து விடுங்கள். ஆறிவிட்டால் ஜெல் மிகவும் கெட்டியாகிவிடும்.
பிறகு வடிகட்ட முடியாமல் போகும். அதனால் கொஞ்சம் ஜெல் கெட்டியாகாமல் திரவத் தன்மையோடு இருக்கும்போதே வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
வடிகட்டிய ஜெல்லை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஆறவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதை ப்ரிட்ஜில் வைத்து 3 வாரங்கள் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.