தேர் அலங்காரம் செய்த ஒருவர் பலி 5பேர் படுகாயம்!

Jun 25, 2024 - 00:46
Sep 9, 2024 - 23:13
 11
தேர் அலங்காரம் செய்த ஒருவர் பலி 5பேர் படுகாயம்!
தேர் அலங்காரம் செய்த ஒருவர் பலி 5பேர் படுகாயம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் மாலையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தேரை அலங்கரிக்கும் போது ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் மேற்கும்பம் சாய்ந்தது.

இதில் 70 வயதான மகாலிங்கம்  என்பவர் தலையில் பலத்த காயத்துடன் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதில், 5- பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக, அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாத்தூர் ராமசாமிபுரத்தில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கடந்த 16ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.

மாலை நடைபெற இருக்கும் விழாவுக்காக தேரை அலங்கரிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தான் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.