அதிரடியாக சரிந்த தங்கம் விலை!
2 ,400 ரூபாய் குறைந்துள்ளது

அதிரடியாக சரிந்த தங்கம் விலை!
திடீரென ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 93,600க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ. 300 குறைந்து ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கம் தொடர்ந்து வரலாறு காணாத அளவில் உச்சம் பெற்று வந்த தற்போது திடீரென விலை குறைந்துள்ளது.
கடந்த 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் 97,000 க்கு விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது.
அதிக ஏற்றத்தை கண்டு வந்த தங்கம் விலை தீபாவளிக்கு பிறகு சரிய தொடங்கியது.
தொடர்ந்து ஏற்றத்தை கண்ட வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 180க்கு விற்பனையாகிறது.