ஸ்டாலின் சட்டைய மட்டும் மாத்துனா போதாது…. சட்டம் ஒழுங்கை மாத்தனும்!

சென்னை கொலை நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது

Mar 21, 2025 - 15:46
 9
ஸ்டாலின் சட்டைய மட்டும் மாத்துனா போதாது…. சட்டம் ஒழுங்கை மாத்தனும்!

ஸ்டாலின் சட்டைய மட்டும் மாத்துனா போதாது…. சட்டம் ஒழுங்கை மாத்தனும்

 

நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல என்னை இந்தியிசை என அழைத்தால் கெட்ட போபம் வரும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவை எச்சரித்துள்ளார்.  நம்ம மாநிலத்துல உள்ள பிரச்சனைக்கு என்ன முடிவு எடுத்துருக்கீங்க இல்லாத தொகுதி வரையறைக்கு குழு அனுப்புறீங்க ஆனால், காவிரி பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டுபுடிச்சீங்களா?

தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திருச்செந்தூரில் பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு முருகனின் அருள் எங்களுக்கு உள்ளது எனக் கூறுகிறார் அப்படியென்றால் முதல்வர் ஏன் கோவிலுக்குப் போவதில்லை? – தமிழிசை

இப்தார் நோன்புக்கு முதல்வர் போகிறார், கிறிஸ்துமஸ் நிகழ்வுக்குப் போகிறார் ஆனால் முருகர் கோவிலுக்கு மட்டும் முதல்வர் செல்வதேயில்லை இறை நம்பிக்கை என்றால் எல்லாம் ஒன்றுதான். 

இந்தி திணிக்கப்படவில்லை என மத்திய அரசு பல முறை கூறிய பிறகும் மீண்டும் மீண்டும் அதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் தமிழகத்தில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முதலில் அக்கறை காட்டுங்கள்.

தமிழக அரசின் தோல்வியை மறைக்கவே இதுபோல இல்லாத பிரச்சனைகளைக் கையில் எடுக்கிறார்கள்.

 மற்ற மாநிலங்கள் தங்களுக்கு எந்த திட்டம் வரும் என எதிர்பார்த்து இருப்பார்கள் ஆனால், தமிழகத்தில் என்ன வீடியோ வரும் என மக்கள் பார்க்கும் சூழல் உள்ள.து  

எதையுமே சட்டை செய்யாத முதல்வர், சட்டையை மட்டும் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்.  

சட்டம் ஒழுங்கை மாற்றாமல் சட்டையை மட்டும் சரி செய்வதால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை – தமிழிசை