ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை தெரியுமா? Ratan Tata

Oct 10, 2024 - 22:42
 10
ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை தெரியுமா? Ratan Tata

ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை தெரியுமா? 

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல் நலக்குறைவால் காலமானார். மேலும் இவரின் மறைவுச் செய்தி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ரத்தன் டாட்டாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த காதல் தோல்விகள்!

ரத்தன் டாடா அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார். அதாவது ரத்தன் டாடாவின் பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில் அவர் அவருடைய பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். பின் அவருடைய நிர்வாக மேல்படிப்பை அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு அங்கேயே ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுதுதான் அங்கு ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். ஆனால், அவருடைய பாட்டியின் உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்த்துக் கொள்வதற்காக ரத்தன் டாடா இந்தியாவிற்கு வந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் காதலித்த பெண்ணையும் இந்தியா வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அப்பொழுதுதான் சீனா இந்தியா மீது போர் தொடுத்துள்ளது. இதனைக் கண்டு பயந்து, அந்த பெண்ணின் பெற்றோர் அவரை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு சம்மதிக்கவில்லை. அதனால், அந்தப் பெண் அமெரிக்காவில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம். இப்படித்தான் ரத்தன் டாடாவின் முதல் காதல் தோல்வியில் முடிந்துள்ளது.

அடுத்ததாக 1970, 1980களில் பிரபல பாலிவுட் நடிகையும், தொலைக்காட்சி பிரபலமுமான சிமி கரேவாலை ரத்தன் டாடா காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததால் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் ரத்தன் டாடாவின் இந்த காதலும் திருமணத்தில் முடியவில்லை. பிறகு, நடிகை சிமி ரவிமோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே இருந்து விட்டார்.

ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாததன் காரணம்!

ரத்தன் டாடாவிடம் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒரு நேர்காணலில் வைத்து கேட்டபோது, அவர் தனக்கு மொத்தம் நான்கு காதல் தோல்விகள் ஏற்பட்டதாக புன்னகையுடன் வெளிப்படையாக கூறியுள்ளார். இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வியுற்றாலும், அதனை எண்ணி தளர்ந்து போகாமல், தொலைநோக்கு பார்வையால் வணிகத்தில் கவனம் செலுத்தி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைத்துள்ளார்.