மாஸ்டர் ப்ளான் போட்ட விஜய்… மக்களை சந்திக்க புதிய திட்டம்!
தொண்டர்களுக்கு அனுமதி இல்லை
மாஸ்டர் ப்ளான் போட்ட விஜய்… மக்களை சந்திக்க புதிய திட்டம்!
மாவட்ட வாரியாக உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டம். வரும் நவ.23 காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இருந்து விஜய் தனது மக்கள் சந்திப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோட் ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வழக்கு நிலுவையில் உள்ளதால் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பிற்கான திட்டத்தை தவெக தயாரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. ரோட் ஷோக்களுக்கு அனுமதி கிடைத்தாலும் உள் அரங்க சந்திப்புகளையும் தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
