திமுக அமைச்சர் மகள் வீட்டில் ரெய்டு !

ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை

Nov 22, 2025 - 14:45
 3
திமுக அமைச்சர் மகள் வீட்டில் ரெய்டு !

திமுக அமைச்சர் மகள் வீட்டில் ரெய்டு! 

திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டில் வரி ஏய்ப்பு தொடர்பாக ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

8 மணி நேரம் நீடித்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இந்திரா திண்டுக்கல்லில் உள்ள 3 நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார். அவரது கணவர் துவாரகநாதன் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வருகிறார்.

வத்தலகுண்டு அருகே துவாரகநாதன் நடத்தி வரும் ஆயுத்த ஆடை நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின் போது இந்திராவின் வீட்டு வாசலில் திமுக நிர்வாகிகள் குவிந்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஐ.பெரியசாமியின் மகள் மற்றும் மருமகளிடம் விசாரணை மேற்கொண்ட பின் இவர்களுக்கு தொடர்பான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஏற்கனவே,  அமலாக்கதுறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.