Thailand-Cambodia Clashes: வலுப்படும் எல்லைச் சண்டை – கம்போடியா மீது வான்வழி தாக்குதல்
Thailand-Cambodia Clashes: வலுப்படும் எல்லைச் சண்டை – கம்போடியா மீது வான்வழி தாக்குதல்
பாங்காக்/ப்னோம் பென், டிசம்பர் 8:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய சமாதான உடன்படிக்கையை இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மீறியதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தாய்லாந்து திங்கள்கிழமை கம்போடியா பிரதேசத்தில் வான்வழி தாக்குதல் மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.
தாய்லாந்து பாதுகாப்புத் துறை தெரிவித்ததாவது,
எல்லைப்பகுதியில் பல இடங்களில் துப்பாக்கிச் சண்டை திடீரென அதிகரித்ததால், தன்னுரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக தாய்லாந்து விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதற்கு கம்போடியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து மேற்கொண்ட இந்த திடீர் தாக்குதல் சமாதான ஒப்பந்தத்தை முழுமையாக மீறுகிறது என்றும், இது நிலைமையை மேலும் பதற்றமாக்கும் என்றும் கம்போடியா அரசாங்கம் கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாக எல்லைச் சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், அமெரிக்கா நடுவர் முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட ceasefire இன்று முழுமையாக சிதைந்தது.
உள்ளூர் தகவல்களின் படி, எல்லைப்பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கனரக ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் இடைவிடாத துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறியப்படுகிறது.
-இலக்கியா சக்திவேல்
