காவல்துறையின் அதிகார திமிர்…கவலைக்கிடமான குடும்பம்!

Jul 3, 2024 - 02:10
 7
காவல்துறையின் அதிகார திமிர்…கவலைக்கிடமான குடும்பம்!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உடலில் பலத்த காயங்களோடு சிறுநீரகங்கள் செயல் இழந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்ணீரோடு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கான காரணமாக அந்த இளைஞரும் அவரது பெற்றோர்களும் கூறுவது தான் நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் தலைகீழாக கட்டி போட்டு கடுமையாக தாக்கியதும் ஆசிட் வீசியதும் தான் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்று அந்த இளைஞர் கூறுவது பேரதிர்வை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து உரிய நீதி விசாரணை மேற்கொண்டு தனது மகனின் உயிரையும் காப்பாற்ற வேண்டுமென அவரது பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.