NDA-வின் வெற்றி பிரகாசமாக உள்ளது… கைக்கோர்க்கும் புதிய கட்சிகள்!

தேவையோ, எது அவசியமோ அதை மட்டுமே தமாகா பேசும்

Nov 18, 2025 - 15:25
 5
NDA-வின் வெற்றி பிரகாசமாக உள்ளது… கைக்கோர்க்கும் புதிய கட்சிகள்!

NDA-வின் வெற்றி பிரகாசமாக உள்ளது… கைக்கோர்க்கும் புதிய கட்சிகள்!

தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதனால் புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வர வாய்ப்பு உள்ளது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சேலம் நெடுஞ்சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார் ஜி.கே வாசன். ஜி.கே.வாசனுடன் தமாகா நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமையை சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே.வாசன் NDA கூட்டணியின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கை குறித்தும் அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசினேன். எது தேவையோ, எது அவசியமோ அதை மட்டுமே தமாகா பேசும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகரிக்க ஈபிஎஸ் தான் காரணம்.

NDA கூட்டணிக்கு பல கட்சிகள் வர உள்ளன பீகாரைப் போலவே NDA-க்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

அதிமுக – தமாகா கூட்டணி, திமுகவுக்கு எதிரான மாற்று சக்தியாக உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.