இது வழக்கமான ஒன்று தான்!
சிபிஐ விசாரணைக்காக அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலை கர்நாடக அரசு திரும்பப் பெற்றதில் தவறு இல்லை என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கார்கே, சிபிஐக்கு அளிக்கப்பட்டுள்ள விசாரணைக்கான ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ள நிகழ்வுகள் கடந்த காலத்திலும் நிகழ்ந்துள்ளன. ஏற்கனவே சிபிஐ தவறாக பயன்படுத்தப்பட்டதால் சிபிஐ விசாரணைக்கு அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலை மாநில அரசு திரும்ப பெற்றது.
அதே போல் சந்தன கடத்தல் வீரப்பன் வழக்கு, அப்துல் கரீம் தெல்கியின் முத்திரைத்தாள் மோசடி, கோலாரில் ஒரு வழக்கு என இப்படி முக்கிய வழக்குகளையே சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
எனவே, விசாரணைக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலை திரும்பப் பெறுவது அல்லது விசாரணைக்கு ஒப்படைப்பது அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என கூறினார்.