மருத்துவ சோதனையில் வெளியான பகீர்!

May 17, 2024 - 20:12
Sep 9, 2024 - 23:50
 8
மருத்துவ சோதனையில் வெளியான பகீர்!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக கண்டனம் தெரிவித்திருந்திருந்த நிலையில் நேற்று பிபவ் குமாருக்கு சம்மன் வழங்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது, டெல்லி எய்ம்ஸில் 3 மணி நேரம் ஸ்வாதிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் டெஸ்ட் முடிவில் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில், ஸ்வாதி முகத்தில் மற்றும் உள்காயங்கங்கள் ஏற்பட்டிருப்பதால் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. இதனிடையே, கெஜ்ரிவாலின் தனி செயலர் பலமுறை தன்னை தாக்கியதாகவும் ஸ்வாதி போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், அதிகாரப்பூர்வமாக வாக்குமூலம் பெற டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.