மூன்று மாதங்கள் கொண்டாடும் திருவிழா! பூந்தமல்லியை | சென்னை

அம்மன் கோவில் திருவிழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறித்தி பேனர் வைத்த கிராமக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

Jul 20, 2024 - 22:49
 17
மூன்று மாதங்கள் கொண்டாடும் திருவிழா! பூந்தமல்லியை | சென்னை

மூன்று மாதங்கள் கொண்டாடும் திருவிழா! பூந்தமல்லியை சென்னை

சென்னை பூந்தமல்லியை அடுத்த மேப்பூர் தாங்கல் அமைந்துள்ள புகழ்பெற்ற கங்கை அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் வருடம் தவறாமல் ஆடி மாதத்தில் அம்மனுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் மேப்பூரில் அமைந்துள்ள செங்கையம்மன் ஆலயத்தில் இருந்து கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.பிரசிதி பெற்ற இந்த பால் குடம் நிகழ்ச்சிக்காக கிராம மக்கள் சார்பில் பேனர்கள் ஊர் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக இந்து இஸ்லாம் கிறிஸ்த்தவ மத கடவுள்களை ஒன்றாக வைத்து அம்மன் கோவில் திருவிழாவிற்கு அனைவரையும் அழைப்பது போல வைக்கப்பட்ட பேனர் பொது மக்களை மிகவும் கவர்ந்தது. அந்த பேனரில் இயேசு,முருகன்,குரான் படிக்கும் சிறுவன் படங்களுக்கு கீழே மதமும் சாதியும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் என்கின்ற வாசம் மத நல்லிணக்கத்தை எடுத்துரைப்பதாக அமைந்தது.அம்மன் கோவில் திருவிழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறித்தி பேனர் வைத்த கிராமக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.