Twitter-ல் ட்ரெண்டாகும் ''GET OUT MODI''

''GET OUT MODI''

Feb 20, 2025 - 13:08
 6
Twitter-ல் ட்ரெண்டாகும் ''GET OUT MODI''

Twitter-ல் ட்ரெண்டாகும் ''GET OUT MODI''

தற்போது தமிழகத்தின் சமூக வலைத்தங்களில் கெட் அவுட் மோடி எனும் ஹேஸ்டேக் தான்  ட்ரெண்டாகி வருகிறது .
இது அண்ணாமலையின் பேச்சுக்கான ஒரு வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்பெல்லாம் பிரதமர் மோடி இங்கு வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என்று தான் சொல்வார்கள்.

தற்போது நிதி தராத காரணத்தால் இனிமேல் மோடி வரும் பொது கெட் அவுட் மோடி என்று தான் சொல்வார்கள் என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்பாக கரூரில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அண்ணாமலை உங்களால் கேட் அவுட் மோடி என கூறமுடியுமா என ஒருமையில் சவால் விடுத்திருந்தார்.

இதனிடையே தற்போது அண்ணாமலையின் சவாலை நிரூப்பிக்கக் கூடிய வகையில் பெரும்பாலான திமுகவினர் உள்ளிட்டோர் டிவிட்டரில் கெட் அவுட் மோடி என்னும் ஹேஸ்டேக்கை ட்ரெண்டை செய்து வருகிறார்கள்.
 
இந்த ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசுக்கும் மணிலா அரசுக்கும் இடையே சில நாட்களாக வார்த்தைப்பார் அதிகரித்து வந்த இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரும் மாரி மாரி விமர்சனங்களை பகிர்ந்து வருவது அதிகமாகி வருகிறது.