ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி! Jayam Ravi | Aarti

Sep 27, 2024 - 01:05
 166
ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி! Jayam Ravi | Aarti

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி! Jayam Ravi | Aarti 

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து இந்த விவாகரத்து செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

கெனிஷாவுடன் எனக்கு தொடர்பில்லை!

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவிக்கு கெனிஷா என்ற பாடகியுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனால்தான் ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போகிறார் என்றும் சில செய்திகள் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கெனிஷா பற்றி வெளிவந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் விவாகரத்து பற்றி ஆர்த்திக்கு முன்பே தெரியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மனைவி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி!

இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி மீது சென்னை அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதாவது அவர் அளித்த புகாரில், சென்னை ஈசிஆர் ரோட்டில் இருக்கும் ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டு தர வேண்டும் என  ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இவர்களின் விவாகரத்து சர்ச்சையாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், திடீரென்று ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.