கேள்வி எழுப்பிய கபில் சிபில் ! 11 நாட்கள் தாமதம் ஏன்?

May 3, 2024 - 17:55
 9
கேள்வி எழுப்பிய கபில் சிபில் ! 11 நாட்கள் தாமதம் ஏன்?

காங்கிரஸில் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வருபவரும், ராஜ்யசபா எம்பியுமான கபில் சிபில் தேர்தல் ஆணையம் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,

ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தேர்தல் கமிஷன் மீது பொதுமக்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கை வைத்தாக வேண்டுமென கூறியிருந்தது.

இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் எவ்வளவு வாக்குப்பதிவானது என்பதை உடனடியாக அறிவித்திருக்க வேண்டும்.

முதற்கட்ட வாக்குபதிவு முடிந்து 11 நாட்கள் கழித்து வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் கமிஷன் வெளியிடுவது சரியா? தவறா? என்கிற கேள்விக்கு யார் பதில் சொல்ல முடியும் அதிலும் பதிபான மொத்த ஒட்டு எவ்வளவு என்கிற விவரமும் இல்லை கூறியுள்ளார்.

மேலும்,  11 நாட்கள் தாமதத்திற்கு என்ன காரணம் என்பதை தேர்தல் கமிஷன் தானாக முன்வந்து செய்தியாளர்களை சந்தித்து அறிவிக்க வேண்டும். இது குறித்து தெளிவு பெறுவதற்காக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரிகள் பலரிடமும் பேசினேன். அப்போது என்னுடைய கேள்விக்கு பதிலளித்த அவர்கள் தேர்தல் முடிந்த அன்று இல்லை தெர்தல் முடிந்த மறுநாள் முழுமையான வாக்கு விவரங்களை வெளியிடுவது தான் வழக்கம் என கூறுகிறார்கள். அப்படியென்றால் இந்த முறை மட்டும் 11 நாட்கள் தாமதமானது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.