ட்ரோன்கள் பறக்க தடை!
ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் பல்கலைக்கழகத்திலிருந்து 2கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த விதமான ட்ரோன்களும் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.