நீட் தேர்வு விவகாரத்தில் கைது!

May 10, 2024 - 00:43
 10
நீட் தேர்வு விவகாரத்தில் கைது!

சமீபத்தில் நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதனிடையே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து இந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை நீடித்து வருகிறது. நீட் வினாத்தாள் கசிவில் தேசிய தேர்வுகள் முகமை இன்னமும் உறுதியான தகவலை வெளியிடவில்லை. நீட் மறுதேர்வு நடத்த வேண்டுமென்று பல்வேறு மருத்துவ அமைப்புகள், மாணவ அமைப்புகள் கோரி வருகின்றன.