தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் இயங்காது…
சென்னையில் தொழில் வரி உயர்வு தற்போது நடைமுறைக்கு வராது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநரகரில் தொழில் நடத்துவோர் மற்றும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கு ஏற்ப அரையாண்டு தொழில்வரியினை சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
அதன் அடிப்படையில், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தொழில் வரியினை செலுத்த வேண்டும்.
இது குறித்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தொழில் வரியை 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை உயர்த்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இது குறித்து தற்போது ஒரு விளக்கமளித்துள்ளது.
அதில், சென்னை மாநகராட்சியின் நிதி வருவாயை பெருக்க தொழில் வரியை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், பிற மாநிலங்களில் உள்ள முன்னணி மாநகராட்சிகளுடன் ஒப்பிடுகையில், சென்னை மாநகராட்சியில் தான் குறைந்த தொழில் வரி உள்ளது.
எனவே சென்னையில் தொழில் வரி உயர்வு தற்போது நடைமுறைக்கு வராது எனவும் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.