பிரதமர் இன்று மாலை சந்திப்பு!

Mar 29, 2024 - 23:48
 9
பிரதமர் இன்று மாலை சந்திப்பு!

”எனது பூத் வலிமையான பூத்” என்ற தலைப்பில் தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் உரையாற்ற இருக்கிறார். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், திமுகவின் மோசமான ஆட்சியை பார்த்து மக்கள் சலிப்படைந்துவிட்டனர் எனவும், பாஜகவை தமிழக மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர் எனவே தமிழகத்தில் வெற்றிக்காக பாஜக தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி வருவது பாராட்டக்குறியது எனவும் கூறியிருக்கிறார்.  

மேலும், இந்த ஆலோசனையில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டிருக்கிறது. பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் பிரதமரின் இந்த உரையாடல் என்பது பாஜக மத்தியில் கவனிக்ககூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.