மாநில கட்சி அந்தஸ்து! வேட்டு போட்டு கொண்டாடிய தொண்டர்கள்!

Jun 6, 2024 - 01:02
 12
மாநில கட்சி அந்தஸ்து! வேட்டு போட்டு கொண்டாடிய தொண்டர்கள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சி அந்தஸ்து பெற்றது தொடர்ந்து புதுக்கோட்டையில்  விசிகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியதோடு அம்பேத்கர் சிலை மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  எட்டு சதவீதத்திற்கு மேலான வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிவினர்  பானை சின்னத்துடன் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.