ரூ. 5 கோடி நிதி அளித்த அதானி!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. 1500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் 3வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்னும் ப்லை எண்ணிகையானது உயர வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திறிகு அரசியல் தலைவர்களும், நடிகர் நடிகைகள் என பலறும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அதே போல் இந்தியாவின் பிரபல தொழிலதிபரான கவுதம் அதானி ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கவுதம் அதானி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வயநாட்டில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான உயிரிழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நினைத்து இதயம் கணக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அதானி குழுமம் கேரளத்துடன் உறுதுணையாக நிற்கிறது, கேரள அரசுக்கு நிவாரண நிதியாக ரூ. 5 கோடியை வழங்குவதன் மூல எங்களது ஆரதவையும் பணிவுடன் வழங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.