செந்தில்பாலாஜிக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, மேல்முறையீட்டு மனு இன்னும் எண்ணிடப்படாத நிலையில் குற்றச்சாட்டுப் பதிவை எப்படி தள்ளிவைக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த மனு மீதான உத்தரவு மீண்டும் இன்று மாலை விசராணைக்கு வர உள்ளது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.