வயநாடு எதிரொலியாக தமிழக அரசு அதிரடி உத்தரவு!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி 250க்கும் மேர்பட்டோர் பலியான நிலையில், உயிரோடு மீட்கப்பட்டவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் பெறப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வயநாடு எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள 8 மலை கிராமங்கள் இருக்கும் மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மழை நாட்களில் கண்காணிக்கவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதில் திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க ஆணையிடப்பட்டது.
மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.