அலட்சியத்தால் பறிபோன பச்சிளம் குழந்தைகளின் உயிர்; அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

48% நச்சு ரசாயனம்

Oct 13, 2025 - 15:12
 5
அலட்சியத்தால் பறிபோன பச்சிளம் குழந்தைகளின் உயிர்; அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அலட்சியத்தால் பறிபோன பச்சிளம் குழந்தைகளின் உயிர்; அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் பலியான விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை.  

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.  

தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை.

ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் "டை எத்திலீன் கிளைக்கால்" என்ற நச்சு ரசாயனம் 48% கலந்திருப்பது தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஸ்ரீசன் எனும் மருந்து நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனத்தில் இருந்து கோல்ட்ரிப் எனும் மருந்து தயார் செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட மருந்தை அங்கிருந்த மருத்துவர்களும் குழந்தைகளுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இந்த மருந்தை சாப்பிட்ட 22 குழந்தைகளுக்கு உள்ளுறுப்புகள் செயலிழந்து உயிரிழந்த நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.