GV Prakash In Kingston | Divya Bharathi

Aug 5, 2024 - 23:57
 16
GV Prakash In Kingston | Divya Bharathi

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது தனது 25வது படமான 'கிங்ஸ்டன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷின் பேர்லல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
 
இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. 'கிங்ஸ்டன்' இந்திய கடலில் நடைபெறும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். கடந்த சில மாதங்களில், படப்பிடிப்பு கப்பல் அரங்கத்தில் நடைபெற்று, சில காட்சிகள் கடலில் படமாக்கப்பட்டன.
 
இந்தப் படத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.