சட்டக்கல்லூரியில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

Aug 5, 2024 - 17:14
Sep 9, 2024 - 13:52
 7
சட்டக்கல்லூரியில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

அம்பேத்கர் அரசு சட்ட கல்லுாரியில் விண்ணப்பிக்க வரும் 8ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில் ஐந்தாண்டு சட்டப்படிப்பு சென்டாக் மூலம் சேர்க்கை நடத்தப்படுகின்றது.

எல்.எல்.பி., எனப்படும் மூன்றாண்டு சட்டப்படிப்பு, எம்.எல்., படிப்பிற்கு கல்லுாரி மூலம் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

இந்த படிப்புகளுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 656 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், விண்ணப்பிக்க தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மூன்று ஆண்டு சட்ட படிப்பு, முதுகலை சட்ட படிப்பு மற்றும் முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டய படிப்புகளுக்கு வரும் 8ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம், பொது பிரிவினருக்கு, ரூ. 1,000 மற்றும் புதுச்சேரியை சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ. 500 ஆகும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அரசு சட்ட கல்லுாரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்த தகவலை கல்லுாரியின் முதல்வர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.