சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!

Aug 5, 2024 - 16:31
Sep 9, 2024 - 13:53
 7
சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!

நாமக்கல் அடுத்த கணேசபுரத்தில் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலு என்பவருக்கு சொந்தமான வீட்டில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வீட்டில் தற்போது வரை மேலும் ஒருவர் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து கரூரில் அதிக சோதனை நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.